திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

பாம்பு உரிஞ்சி, மதி கிடந்து, திரைகள் ஏங்க, பனிக்
கொன்றை சடை வைத்தார்; பணி செய் வானோர்
ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார்;
அடு சுடலைப் பொடி வைத்தார்; அழகும் வைத்தார்;
ஓம்ப(அ)அரிய வல்வினை நோய் தீர வைத்தார்;
உமையை ஒருபால் வைத்தார்; உகந்து வானோர்,
நாம், பரவும் திருவடி என் தலைமேல் வைத்தார்-
நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

பொருள்

குரலிசை
காணொளி