திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார்; குரு
மணி சேர் மலை வைத்தார்; மலையைக் கையால்
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ
ஒருவிரலால் உற வைத்தார்; “இறைவா!” என்று
புலம்புதலும், அருளொடு போர் வாளும் வைத்தார்;
புகழ் வைத்தார்; புரிந்து ஆளாக் கொள்ள வைத்தார்;
நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார்-
நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.

பொருள்

குரலிசை
காணொளி