மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே! முறைமையால்
எல்லாம் படைக்கின்றானே!
ஏத்து அவனாய் ஏழ் உலகும் ஆயினானே!
இன்பனாய்த் துன்பம் களைகின்றானே!
காத்தவனாய் எல்லாம் தான் காண்கின்றானே!
கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ்
ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.