வானவனாய் வண்மை மனத்தினானே! மா மணி
சேர் வானோர் பெருமான், நீயே;
கானவனாய் ஏனத்தின் பின் சென்றானே! கடிய
அரணங்கள் மூன்று அட்டானே!
தானவனாய்த் தண் கயிலை மேவினானே! தன் ஒப்பார்
இல்லாத மங்கைக்கு என்றும்
தேனவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ்
ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.