திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

தூயவன் காண்; நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கு அனைய
சோதியான் காண்;
தீ அவன் காண்; தீ அவுணர் புரம் செற்றான் காண்; சிறுமான்
கொள் செங்கை எம்பெருமான் தான் காண்;
ஆயவன் காண்; ஆரூரில் அம்மான் தான் காண்; அடியார்கட்கு
ஆர் அமுதம் ஆயினான் காண்;
சேயவன் காண்; சேமநெறி ஆயினான் காண்; சிவன் அவன்
காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.

பொருள்

குரலிசை
காணொளி