திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

நலம் இலாதானை, “நல்லனே!” என்று, நரைத்த மாந்தரை, “இளையனே!”,
குலம் இலாதானை, “குலவனே!” என்று, கூறினும் கொடுப்பார் இலை;
புலம் எலாம் வெறி கமழும் பூம் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
அலமரது அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

பொருள்

குரலிசை
காணொளி