திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

துஞ்சியும் பிறந்தும் சிறந்தும் துயக்கு அறாத மயக்கு இவை
அஞ்சி, ஊரன் திருப் புறம்பயத்து அப்பனைத் தமிழ்ச் சீரினால்
நெஞ்சினாலே, “புறம்பயம் தொழுது உய்தும்” என்று நினைத்தன
வஞ்சியாது உரைசெய்ய வல்லவர், வல்லர், வான் உலகு ஆளவே.

பொருள்

குரலிசை
காணொளி