பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
விட்டு இலங்கு எரி ஆர் கையினானை, வீடு இலாத வியன் புகழானை, கட்டு வாங்கம் தரித்த பிரானை, காதில் ஆர் கனகக்குழையானை, விட்டு இலங்கு புரிநூல் உடையானை, வீந்தவர் தலை ஓடு கையானை, கட்டியின் கரும்பு ஓங்கிய நீடூர்க் கண்டு நாம் பணியா விடல் ஆமே?