திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: தக்கேசி

ஏழை மானுட இன்பினை நோக்கி, இளையவர் வயப்பட்டு இருந்து, “இன்னம்
வாழை தான் பழுக்கும், நமக்கு” என்று வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டு,
கூழை மாந்தர் தம் செல்கதிப் பக்கம், போகமும் பொருள் ஒன்று அறியாத
ஏழையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது(வ்) உறை எந்தைபிரானே! .

பொருள்

குரலிசை
காணொளி