பாடுமாப் பாடிப் பணியும் ஆறு அறியேன்; பனுவுமா பனுவிப் பரவும் ஆறு அறியேன்;
தேடுமா தேடித் திருத்தும் ஆறு அறியேன்; செல்லுமா செல்லச் செலுத்தும் ஆறு அறியேன்;
“கூடும் ஆறு எங்ஙனமோ?” என்று கூறக் குறித்துக் காட்டிக் கொணர்ந்து எனை ஆண்டு,
“வாடி நீ வாளா வருந்தல்!” என்பானை வலி வலம் தனில் வந்து கண்டேனே .