திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: புறநீர்மை

கூதல் இடும் சடையும், கோள் அரவும், விரவும் கொக்கு இறகும், குளிர் மா மத்தமும், ஒத்து உன தாள்
ஓதல் உணர்ந்து, அடியார் உன் பெருமைக்கு நினைந்து உள் உருகா, விரசும் ஓசையைப் பாடலும், நீ
ஆதல் உணர்ந்து அவரோடு அன்பு பெருத்து அடியேன் அங்கையில் மா மலர் கொண்டு, என் கணது அல்லல் கெட,
காதல் உற, தொழுவது என்றுகொலோ, அடியேன்?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .

பொருள்

குரலிசை
காணொளி