திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: புறநீர்மை

பண்ணு தலைப் பயன் ஆர் பாடலும், நீடுதலும்,- பங்கயமாது அனையார்,-பத்தியும்; “முத்தி அளித்து
எண்ணு தலைப்பெருமான்” என்று எழுவார் அவர் தம் ஏசறவும்(ம்); “இறை ஆம் எந்தையையும் விரவி
நண்ணுதலைப் படும் ஆறு எங்ஙனம்?” என்று அயலே நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும்
கண்ணுதலை, கனியை, காண்பதும்; என்றுகொலோ? கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .

பொருள்

குரலிசை
காணொளி