திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்

29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
பருகுதோ றமுதமொத் தவர்க்கே
தித்தியா இருக்கும், தேவர்காள், இவர்தம்
திருவுரு இருந்தவா பாரீர் !
சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
தனிமுழு முதலுமாய் அதற்கோர்
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடங்குலா வினரே.

பொருள்

குரலிசை
காணொளி