பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
வெள் எருக்கு அரவம் விரவும் சடைப் புள்ளிருக்கு வேளூர் அரன் பொன்கழல் உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர், நள் இருப்பர், நரகக்குழியிலே.
மாற்றம் ஒன்று அறியீர்; மனைவாழ்க்கை போய்க் கூற்றம் வந்து உமைக் கொள்வதன் முன்னமே, போற்ற வல்லிரேல், புள்ளிருக்குவேளூர், சீற்றம் ஆயின தேய்ந்து அறும்; காண்மினே!
அருமறையனை, ஆணொடு பெண்ணனை, கருவிடம் மிக உண்ட எம் கண்டனை, புரிவெண்நூலனை, புள்ளிருக்குவேளூர், உருகி நைபவர் உள்ளம் குளிருமே.
தன் உரு(வ்)வை ஒருவருக்கு அறிவு ஒணா மின் உரு(வ்)வனை, மேனி வெண் நீற்றனை, பொன் உரு(வ்)வனை, புள்ளிருக்குவேளூர், என்ன வல்லவர்க்கு இல்லை, இடர்களே.
செங்கண்மால் பிரமற்கும் அறிவு ஒணா அங்கியின்(ன்) உரு ஆகி, அழல்வது ஓர் பொங்கு அர(வ்)வனை, புள்ளிருக்கு வேளூர் மங்கைபாகனை, வாழ்த்த, வரும், இன்பே.
குற்றம் இ(ல்)லியை, கோலச் சிலையினால் செற்றவர் புரம் செந்தழல் ஆக்கியை, புற்று அர(வ்)வனை, புள்ளிருக்குவேளூர், பற்ற வல்லவர் பாவம் பறையுமே.
கையினோடு கால் கட்டி, உமர் எலாம், ஐயன் வீடினன் என்பதன் முன்னம், நீர், பொய் இலா அரன், புள்ளிருக்குவேளூர், மை உலாவிய கண்டனை, வாழ்த்துமே!
உள்ளம் உள்கி உகந்து, சிவன் என்று, மெள்ள உள்க வினை கெடும்; மெய்ம்மையே; புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர் வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே!
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.
அரக்கனார் தலைபத்தும் அழிதர நெருக்கி, மா மலர்ப்பாதம் நிறுவிய பொருப்பனார் உறை புள்ளிருக்குவேளூர் விருப்பினால்-தொழுவார் வினை வீடுமே.