பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தோன்றி என் உள்ளே சுழன்று எழுகின்றது ஓர் மூன்று படி மண்டலத்து முதல்வனை ஏன்று எய்தி இன்புற்று இருந்தே இளம் கொடி நான்று நலம் செய் நலம் தரும் ஆறே.
மன்று நிறைந்தது மா பரம் ஆயது நின்று நிறைந்தது நேர் தரு நந்தியும் கன்று நினைந்து எழு தாய் என வந்தபின் குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே.
ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப் பரம் கூறா உபதேசம் கூறில் சிவபரம் வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார் பேறு ஆக ஆனந்தம் பேணும் பெருகவே.
பற்று அறப் பற்றில் பரம் பதி ஆவது பற்று அறப் பற்றில் பரன் அறிவே பரம் பற்று அறப் பற்றினில் பற்ற வல்லார்க்கே பற்று அறப் பற்றில் பரம் பரம் ஆமே.
பரம் பரம் ஆன பதி பாசம் பற்றாப் பரம் பரம் ஆகும் பரம் சிவம் மேவப் பரம் பரம் ஆன பர சிவானந்தம் பரம் பரம் ஆகப் படைப்பது அறிவே.
நனவில் கலாதியா நால் ஒன்று அகன்று தனி உற்ற கேவலம் தன்னில் தான் ஆகி நினைவுற்று அகன்ற அதீதத்து உள் நேயம் தனை உற்றிடத் தானே தற்பரம் ஆமே.
தன் கண்ட தூயமும் தன்னில் விலாசமும் பின் காணும் தூடணம் தானும் பிறழ்வுற்றுத் தற் பரன் கால பரமும் கலந்து அற்ற நற் பரா தீதமும் நாட அகராதியே.