பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
இடன் ஒரு மூன்றில் இயைந்த ஒருவன் கடன் உறு அவ் உருவேறு எனக் காணும் திடம் அது போலச் சிவ பர சீவர் உடன் உறை பேதமும் ஒன்று எனல் ஆமே.
ஒளியை ஒளிசெய்து ஓம் என்று எழுப்பி வளியை வளி செய்து வாய்த்திட வாங்கி வெளியை வெளி செய்து மேல் எழ வைத்துத் தெளியத் தெளியும் சிவ பதம் தானே.
முக்கரணங்களின் மூர்ச்சை தீர்த்து ஆவது அக் கைக் காரணம் என்னத் தந்தனன் காண் நந்தி மிக்க மனோன்மணி வேறே தனித்து ஏக ஒக்கும் அது உன்மணி ஓது உள் சமாதியே.