பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
காரியம் ஏழ் கண்டு அறு மாயப் பாழ்விடக் காரணம் ஏழ் கண்டு அறும் போதப் பாழ்விடக் காரிய காரண வாதனை கண்டு அறும் சீரூப சாந்த முப் பாழ் விடத் தீருமே.
மாயப் பாழ் சீவன் வியோமப் பாழ்மன் பரன் சேய முப் பாழ் எனச் சிவசத்தியில் சீவன் ஆய வியாப்தம் எனும் முப்பாழாம் அந்தத் தூய சொரூபத்தில் சொல் முடி வாகுமே.
எதிர் அற நாளும் எருது வந்து ஏறும் பதி எனும் நந்தி பதம் அது கூடக் கதி எனப் பாழைக் கடந்த அந்தக் கற்பனை உதறிய பாழில் ஒடுங்கு கின்றேனே.
துரியம் அடங்கிய சொல் அறும் பாழை அரிய பரம் பரம் என்பர்கள் ஆதர் அரிய பரம் பரம் என்றே துதிக்கும் அரு நிலம் என்பதை யார் அறிவாரே
ஆறு ஆறு நீங்க நமவாதி அகன்றிட்டு வேறு ஆகிய பரை ஆ என்று மெய்ப் பரன் ஈறு ஆன வாசியில் கூட்டும் அது அன்றோ தேறாச் சிவாய நம எனத் தேறிலே.
உள்ளம் உரு என்றும் உருவம் உளம் என்றும் உள்ள பரிசு அறிந்தோறும் அவர்கட்குப் பள்ளமும் இல்லை திடர் இல்லை பாழ் இல்லை உள்ளமும் இல்லை உரு இல்லை தானே.