பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
நவம் ஆம் அவத்தை நனவு ஆதி பற்றில் பவம் ஆம் மலம் குணம் பற்று அற்றுப் பற்றாத் தவம் ஆன சத்திய ஞானப் பொதுவில் துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே.
சிவம் ஆன சிந்தையில் சீவன் சிதைய பவம் ஆன மும் மலம் பாறிப் பறிய நவம் ஆன அந்தத்தின் நல் சிவ போதம் தவம் ஆம் அவை ஆகித் தான் அல்ல ஆகுமே.
முன் சொன்ன ஒன்பானின் முன் உறு தத்துவம் தன் சொல்லில் எண்ணத் தகா ஒன்பான் வேறு உள பின் சொல்ல ஆகும் இவ் ஈர் ஒன்பான் பேர்த்திட்டு தன் செய்த ஆண்டவன் தான் சிறந்தானே.
உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம் பகர்ந்த பிரான் என்னும் பண்பினை நாடி அகந்து எம்பிரான் என்பான் அல்லும் பகலும் இகந்தன வல்வினையோடு அறுத்தானே.
நலம் பல காலம் தொகுத்தன நீளம் குலம் பல வண்ணம் குறிப் பொடும் கூடும் பலம் பல பன்னிரு கால நினையும் நிலம் பலவாறு இன நீர்மையன் தானே.
ஆதி பராபரம் ஆகும் பரா பரை சோதி பரம் உயிர் சொல்லும் நல் தத்துவம் ஓதும் கலை மாயை ஓர் இரண்டு ஓர் முத்தி நீதி ஆம் பேதம் ஒன்பானுடன் ஆதியே.
தேறாத சிந்தை தெளியத் தெளிவித்து வேறா நரக சுவர்க்கமும் மேதினி ஆறாப் பிறப்பும் உயிர்க்கு அருளால் வைத்தான் வேறாத் தெளியார் வினை உயிர் பெற்றதே.
ஒன்பான் அவத்தை உள் ஒன்பான் அபிமானி நன்பால் பயிலும் நவ தத்துவம் ஆதி ஒன்பானில் நிற்பது ஓர் முத்துரியத்து உறச் செம்பால் சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே.
நாசி நுனியினில் நான்கு மூவிரல் இடை ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர் பேசி இருக்கும் பெரு மறை அம் மறை கூசி இருக்கும் குணம் அது ஆமே.