பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தழைக் கின்ற செம் தளிர்த் தண் மலர்க் கொம்பில் இழைக் கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும் பிழைப்பு இன்றி எம்பெருமான் அடி ஏத்தார் அழைக்கின்ற போது அறியார் அவர் தாமே.
ஐவர்க்கு ஒரு செய் விளைந்து கிடந்தது ஐவரும் அச் செய்யைக் காத்து வருவார்கள் ஐவர்க்கும் நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச் செய்யைக் காவல் விட்டாரே.
மத்தளி ஒன்று உள தாளம் இரண்டு உள அத்துள்ளே வாழும் அரசரும் அஞ்சு உள்ள அத்துள்ளே வாழும் அரசனும் அங்கு உளன் மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.
வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை வேங்கடத்து உள்ளே விளையாடு நந்தியை வேங்கடம் என்றே விரகு அறியாதவர் தாங்க வல்லார் உயிர் தாம் அறியாரே.
சென்று உணர்வான் திசை பத்தும் திவாகரன் அன்று உணர்வால் அளக்கின்றது அறிகிலர் நின்று உணரார் இந் நிலத்தின் மனிதர்கள் பொன்று உணர்வாரில் புணர்க்கின்ற மாயமே.
மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை பீறும் அதனைப் பெரிது உணர்ந்தார் இலை கூறும் கருமயிர் வெண்மயிர் ஆவது ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எனும் நீரே.
துடுப்பு இடு பானைக்கும் ஒன்றே அரிசி அடுப்பு இடு மூன்றிற்கும் அஞ்சு எரிகொள்ளி அடுத்து எரியாமல் கொடுமின் அரிசி விடுத்தன நாள்களும் மேல் சென்றனவே.
இன்புறு வண்டு இங்கு இனமலர் மேல் போய் உண்பது வாச மது போல் உயிர் நிலை இன்பு உற நாடி நினைக்கிலும் மூன்று ஒளி கண்புற நின்ற கருத்துள் நில்லானே.
ஆம் விதி நாடி அறம் செய்மின் அந்நிலம் போம் விதி நாடிப் புனிதனைப் போற்று மின் நாம் விதி வேண்டும் அது என் சொலின் மானிடர் ஆம் விதி பெற்ற அருமை வல்லார்க்கே.
அவ்வியம் பேசி அறம் கெட நில்லன்மின் வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வன்மின் செவ்வியன் ஆகிச் சிறந்து உண்ணும் போது ஒரு தவ்விக் கொடு உண்மின் தலைப் பட்ட போதே.