பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சன் மார்க்கம் தானே சக மார்க்கம் ஆனது மன் மார்க்கம் ஆம் முத்தி சித்திக்குள் வைப்பது ஆம் பின் மார்க்கம் ஆனது பேராப் பிறந்து இறந்து உன் மார்க்க ஞானத்து உறுதியும் ஆமே
மருவும் துவாதச மார்க்கம் இல்லாதார் குருவும் சிவனும் சமயமும் கூடார் வெருவும் திருமகள் வீட்டு இல்லை ஆகும் உருவும் கிளையும் ஒருங்கு இழப்பாரே.
யோகச் சமாதியின் உள்ளே அகல் இடம் யோகச் சமாதியின் உள்ளே உளர் ஒளி யோகச் சமாதியின் உள்ளே உள சத்தி யோகச் சமாதி உகந்தவர் சித்தரே.
யோகமும் போகமும் யோகியர்க்கு ஆகும் ஆல் யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்து ஓர் போகம் புவியில் புருடார்த்த சித்தியது ஆகும் இரண்டும் அழியாத யோகிக்கே.
ஆதார சோதனையால் நாடி சுத்திகள் மேதாதி ஈர் எண் கலாந்தது விண் ஒளி போதஆலயத்துப் புலன் கரணம் புந்தி சாதாரணம் கெடல் ஆம் சக மார்க்கமே.
பிணங்கி நிற்கின்றவை ஐந்தையும் பின்னை அணங்கி எறிவன் அயிர் மன வாளால் கணம் பதினெட்டும் கருதும் ஒருவன் வணங்க வல்லான் சிந்தை வந்து நின்றானே.
வளம் கனி ஒக்கும் வள நிறத் தார்க்கும் வளம் கனி ஒப்பது ஓர் வாய்மையன் ஆகும் உளம் கனிந்து உள்ளம் உகந்து இருப்பார்க்குப் பழம் கனிந்து உள்ளே பகுந்து நின்றானே.