பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம் பெண்தான் மிக ஆனான், பிறைச் சென்னிப் பெருமான், ஊர் தண் தாமரை மலராள் உறை தவள நெடுமாடம் விண் தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே.