பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
கடம் தாங்கிய கரியை அவள் வெருவ உரி போர்த்து, படம் தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழ ஊர் நடம் தாங்கிய நடையார், நல பவளத்துவர் வாய், மேல் விடம் தாங்கிய கண்ணார், பயில் வேணுபுரம் அதுவே.