திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அருளாது ஒழிந்தால், அடியேனை, அஞ்சேல் என்பார் ஆர், இங்கு?
பொருளா, என்னைப் புகுந்து, ஆண்ட பொன்னே! பொன்னம்பலக் கூத்தா!
மருள் ஆர் மனத்தோடு, உனைப் பிரிந்து, வருந்துவேனை, வா என்று, உன்
தெருள் ஆர் கூட்டம் காட்டாயேல், செத்தே போனால், சிரியாரோ?

பொருள்

குரலிசை
காணொளி