திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நல்காது ஒழியான் நமக்கு என்று, உன் நாமாம் பிதற்றி, நயன நீர்
மல்கா, வாழ்த்தா, வாய் குழறா, வணங்கா, மனத்தால் நினைந்து உருகி,
பல்கால் உன்னைப் பாவித்து, பரவி, பொன்னம்பலம் என்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி, அருளாய்! என்னை உடையானே!

பொருள்

குரலிசை
காணொளி