பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பரவுவார் அவர் பாடு சென்று அணைகிலேன்; பல் மலர் பறித்து ஏத்தேன்; குரவு வார் குழலார் திறத்தே நின்று, குடி கெடுகின்றேனை இரவு நின்று, எரி ஆடிய எம் இறை, எரி சடை மிளிர்கின்ற அரவன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே.