திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செங் கண் விடையார் திருமுன்றில் விழுந்த திருப்பள்ளித் தாமம்
அங் கண் எடுத்து மோந்த அதற்கு அரசர் உரிமைப் பெருந்தேவி
துங்க மணி மூக்கு அரிந்த செருத் துணையார் தூய கழல் இறைஞ்சி
எங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார் உரிமை அடிமை எடுத்து உரைப்பாம்.

பொருள்

குரலிசை
காணொளி