பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
ஒருத்திஉமையோடும் ஒருபாகம் அதுஆய நிருத்தன் அவன், நீதி அவன், நித்தன், நெறிஆய விருத்தன் அவன், வேதம் என அங்கம் அவை ஓதும் கருத்தவன், இருப்பது கருப்பறியலூரே.