பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
ஊன் தோயும் வெண் மழுவும் அனலும் ஏந்தி, உமை காண, மீன் தோயும் திசை நிறைய ஓங்கி ஆடும் வேடத்தீர்! தேன் தோயும் பைம்பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர், வான் தோயும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.