திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரபஞ்சமம்

சனி, புதன், ஞாயிறு, வெள்ளி, திங்கள், பலதீயன,
முனிவது செய்து உகந்தானை வென்று, அவ் வினை மூடிட,
“இனி அருள் நல்கிடு!” என்று அண்ணல் செய்த இராமேச்சுரம்,
பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே!

பொருள்

குரலிசை
காணொளி