திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரபஞ்சமம்

சாக்கியர், வன் சமண்கையர், மெய்யில்-தடுமாற்றத்தார்
வாக்கு இயலும்(ம்) உரை பற்று விட்டு, மதி ஒண்மையால்,
ஏக்கு இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
ஆக்கிய செல்வனை ஏத்தி வாழ்மின்(ன்), அருள்
ஆகவே!

பொருள்

குரலிசை
காணொளி