திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லிக்கௌவாணம்

மாகத்திங்கள் வாள்முக மாதர் பாட, வார்சடைப்
பாகத்திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய பண்டங்கன்-
மேகத்து ஆடு சோலை சூழ் மிடை சிற்றேமம் மேவினான்;
ஆகத்து ஏர் கொள் ஆமையைப் பூண்ட அண்ணல்
அல்லனே!

பொருள்

குரலிசை
காணொளி