திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லிக்கௌவாணம்

கிளரும் திங்கள் வாள்முக மாதர் பாட, கேடு இலா
வளரும் திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய மா தவன்-
தளிரும் கொம்பும் மதுவும் ஆர் தாமம் சூழ் சிற்றேமத்தான்;
ஒளிரும் வெண் நூல் மார்பன் என் உள்ளத்து உள்ளான்
அல்லனே!

பொருள்

குரலிசை
காணொளி