பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம் கட்டு உறு கதிர் இளவனமுலை இணையொடு கலவலின், நட்டு உறு செறி வயல் மருவு நள்ளாறர் தம் நாமமே; இட்டு உறும் எரியினில் இடில், இவை பழுது இலை; `மெய்ம்மையே!