திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

பொறி கிளர் பாம்பு அரை ஆர்த்து, அயலே புரிவோடு
உமை பாட,
தெறி கிளரப் பெயர்ந்து, எல்லி ஆடும் திறமே தெரிந்து
உணர்வார்
எறி கிளர் வெண்திரை வந்து பேரும் இராமேச்சுரம் மேய,
மறி கிளர் மான் மழுப் புல்கு கை, எம் மணாளர்; செயும்
செயலே!

பொருள்

குரலிசை
காணொளி