சம்பரற்கு அருளி, சலந்தரன் வீயத் தழல் உமிழ் சக்கரம்
படைத்த
எம்பெருமானார், இமையவர் ஏத்த, இனிதின் அங்கு உறைவு
இடம் வினவில்
அம்பரம் ஆகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை
பொழியும்,
உம்பர்கள் ஏத்தும் ஓமமாம்புலியூர் உடையவர், வடதளி
அதுவே.