திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: புறநீர்மை

புற்று அரவு அணிந்து, நீறு மெய் பூசி, பூதங்கள் சூழ்தர, ஊர்
ஊர்
பெற்றம் ஒன்று ஏறிப் பெய் பலி கொள்ளும் பிரான் அவன்
உறைவு இடம் வினவில்
கற்ற நால்வேதம் அங்கம் ஓர் ஆறும் கருத்தினார்
அருத்தியால்-தெரியும்
உற்ற பல்புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி
அதுவே.

பொருள்

குரலிசை
காணொளி