பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விரை செய் நறும் பூந் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவிப் பரசுபெறு மா தவ முனிவன் பரசு ராமன் பெறு நாடு, திரை செய் கடலின் பெருவளவனும் திருந்து நிலனின் செழு வளனும் வரையின் வளனும் உடன் பெருகி மல்கும் நாடு மலை நாடு.