பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி, போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன், யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது, காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன். கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.