பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வளர்மதிக் கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி, களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக் கண் நிற்கின்றேன், அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்ற போது, இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!