பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கரு உற்று இருந்து உன் கழலே நினைந்தேன்; கருப்புவியில்- தெருவில் புகுந்தேன்; திகைத்த(அ)அடியேனைத் திகைப்பு ஒழிவி! உருவில்-திகழும் உமையாள் கணவா! விடின் கெடுவேன்- திருவின் பொலி சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!