திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

ஞானம் ஆகிய நன்கு உணர் ஆனையார்;
ஊனை வேவ உருக்கிய ஆனையார்;
வேனல் ஆனை உரித்து உமை அஞ்சவே,
கான ஆனைகண்டீர்-கடவூரரே.

பொருள்

குரலிசை
காணொளி