விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம்;
விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம்;
பட்டு, உருவ மால்யானைத் தோல் கீண்டான் ஆம்;
பல பலவும் பாணி பயின்றான் தான் ஆம்;
எட்டு உருவ-மூர்த்தி ஆம், எண்தோளான் ஆம்;
என் உச்சி மேலான் ஆம்; எம்பிரான் ஆம்;
கட்டு உருவம் கடியானைக் காய்ந்தான் ஆகும்;
கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.