பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
சங்கோடு இலங்கத் தோடு பெய்து, காதில் ஒர் தாழ்குழையன், அம் கோல்வளையார் ஐயம் வவ்வாய், ஆய்நலம் வவ்வுதியே? செங்கோல் நடாவிப் பல் உயிர்க்கும் செய் வினை மெய் தெரிய, வெங் கோத் தருமன் மேவி ஆண்ட வெங்குரு மேயவனே!