திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

உய்த்தவன் காண்; உடல் தனக்கு ஓர் உயிர் ஆனான் காண்;
ஓங்காரத்து ஒருவன் காண்; உலகுக்கு எல்லாம்
வித்து அவன் காண்; விண் பொழியும் மழை ஆனான் காண்;
விளைவு அவன் காண்; விரும்பாதார் நெஞ்சத்து என்றும்
பொய்த்தவன் காண்; பொழில் ஏழும் தாங்கினான் காண்;
புனலோடு, வளர்மதியும், பாம்பும், சென்னி
வைத்தவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி
வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.

பொருள்

குரலிசை
காணொளி