திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

நிலையவன் காண்; தோற்று அவன் காண்; நிறை ஆனான் காண்;
நீர் அவன் காண்; பார் அவன் காண், ஊர் மூன்று எய்த
சிலையவன் காண்; செய்ய வாய், கரிய கூந்தல், தேன்மொழியை
ஒருபாகம் சேர்த்தினான் காண்;
கலையவன் காண்; காற்று அவன் காண்; காலன் வீழக் கறுத்தவன்
காண்; கயிலாயம் என்னும் தெய்வ-
மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான்
காண்; அவன் என் மனத்து உளானே.

பொருள்

குரலிசை
காணொளி