பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை, பிரிவு
இலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை, மந்திரமும் தந்திரமும்
மருந்தும் ஆகித்
தீரா நோய் தீர்த்து அருள வல்லான் தன்னை, திரிபுரங்கள்
தீ எழத் திண் சிலை கைக் கொண்ட
போரானை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற
நாள் போக்கினேனே!.