திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

மண் அதனில் ஐந்தை; மா நீரில் நான்கை; வயங்கு
எரியில் மூன்றை; மாருதத்து இரண்டை;
விண் அதனில் ஒன்றை; விரிகதிரை; தண்மதியை,
தாரகைகள் தம்மில்; மிக்க
எண் அதனில் எழுத்தை; ஏழ் இசையை; காமன்
எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றிக்-
கண்ணவனை; கற்குடியில் விழுமியானை;
கற்பகத்தை;-கண் ஆரக் கண்டேன், நானே.

பொருள்

குரலிசை
காணொளி