திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

மை ஆரும் மணிமிடற்றாய்! மாது ஓர் கூறாய்!
மான்மறியும், மா மழுவும், அனலும், ஏந்தும்
கையானே! காலன் உடல் மாளச் செற்ற கங்காளா!
முன் கோளும் விளைவும் ஆனாய்!
செய்யானே, திருமேனி! அரியாய்! தேவர்-குலக்
கொழுந்தே! தென் ஆனைக்காவுள் மேய
ஐயா! உன் பொன்பாதம் அடையப்பெற்றால்,
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

பொருள்

குரலிசை
காணொளி