திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

சொல் பாவும் பொருள் தெரிந்து, தூய்மை நோக்கி,
தூங்காதார் மனத்து இருளை வாங்காதானை;
நல் பான்மை அறியாத நாயினேனை நன்நெறிக்கே
செலும் வண்ணம் நல்கினானை;
பல்பாவும் வாய் ஆரப் பாடி, ஆடி, பணிந்து,
எழுந்து, குறைந்து, அடைந்தார் பாவம் போக்க-
கிற்பானை; கீழ்வேளூர் ஆளும் கோவை;
கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.

பொருள்

குரலிசை
காணொளி