உளர் ஒளியை, உள்ளத்தினுள்ளே நின்ற
ஓங்காரத்து உள்பொருள் தான் ஆயினானை,
விளர் ஒளியை விடு சுடர்கள் இரண்டும்
ஒன்றும் விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை,
வளர் ஒளியை, மரகதத்தின் உருவினானை,
வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தி ஏத்தும்
கிளர் ஒளியை, கீழ்வேளூர் ஆளும் கோவை,
கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.